16 வயதிலேயே சினிமாவுக்கு வந்து தற்போது பிரபல நடிகையாக வளம் வருபவர்தன் நடிகை தமன்னா . இவரின் முதல் திரைப்படமான கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் விஜய், அஜித் உள்ளிட்ட பிராபல நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்திருக்கிறார்.
இவரும் பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவை காதலித்து வந்தநிலையில், சமீபத்தில் இருவரும் பிரிந்ததாக தற்போது சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், தமன்னா தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் ஒரு பதிவு பெரும் பேசுபொருளாக மாறி உள்ளது.
குறித்த பதிவில், “வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம், நாம்தான் அற்புதங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார். தற்போது இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதை காணக்கூடியதாகவுள்ளது.