NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அஹங்கம பகுதியில் கணவன் மனைவி கழுத்தறுத்து கொலை..!

அஹங்கம, வல்ஹெங்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அல்கேவத்தையைச் சேர்ந்த கமனி வீரதுங்க (63), பி.ஜயசிங்க (67) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த தம்பதியின் மகள் சிகிச்சைக்காக கொழும்பு சென்றுள்ளார். இன்று காலை வீட்டிலிருந்த தந்தையின் தொலைபேசிக்கு மகள் அழைப்பு விடுத்த நிலையில் தந்தையிடமிருந்து பதில் இல்லாத காரணத்தினால் உறவினர்களிடம் தந்தையை சென்று பார்க்கமாறு கூறியுள்ளார்.

அதன்படி, உறவினர் சென்று பார்த்தபோது, வீட்டில் இரத்தக்கறை இருந்ததை பார்த்து பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பொலிஸார் சம்பவயிடத்தை சோதனை செய்தபோது, வீட்டுக்குள் தம்பதியர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அஹங்கம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Related Articles