NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆசிய விளையாட்டு ஊடக மையத்தின் செயற்பாடுகள் ஆரம்பம் !

ஹாங்சோவில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், மெயின் மீடியா சென்டர் (எம்எம்சி) அதிகாரப்பூர்வமாக இன்று திங்கள்கிழமை செயற்படத் தொடங்கியது.

 ஊடகப் பணியாளர்கள் மருத்துவ நிலையம், புத்தகக் கடை , தபால் அலுவலகம் போன்ற பல்வேறு வசதிகள் இங்கு உள்ளன.

 முன் பக்கத்தில் அமைந்துள்ள கலாச்சார கண்காட்சி பகுதி, பாரம்பரிய ஓவியங்கள் ,செலாடன் உள்ளிட்டவை சீன கலையைக் காட்சிப்படுத்துகிறது. இந்த காட்சிகள் சீன கலாச்சாரம் மற்றும் ஹாங்ஜோ ஆகிய இரண்டின் தனித்துவமான பண்புகளை உள்ளடக்கியது.

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கிழக்கு சீனாவில் செப்டம்பர் 23 முதல் ஒக்டோபர் 8 வரை நடைபெற உள்ளது.

Share:

Related Articles