ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு இணையாக மகளிர் கிரிக்கெட் அணிக்கும் சம்பளம் தருவதாக இங்கிலாந்து கிரிக்கெட் நேற்று (30) அறிவித்துள்ளது.
இங்கிலாந்துக்கு முன்னதாக, நியூசிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகியன ஆண்கள் அணிக்கும், பெண்கள் அணிக்கும் சமமான சம்பளத்தை தருவதாக அறிவித்தன.
இது கிரிக்கெட் தொடரில் மிகப்பெரிய முன்னெடுப்பு மற்றும் வளர்ச்சிக்கான பாதையாக பார்க்கப்படுகிறது.