NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்து டெஸ்ட்: ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!

ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் முறையாக டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.

இவ்விரு அணிகளுக்கு இடையே ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் நாளை மறதினம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நியூசிலாந்து தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஹஷ்மத்துலா ஷாஹிடி அணித்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த குமார் சங்ககார அந்த பதவியில் இருந்து விலகி உள்ள நிலையில் ராகுல் டிராவிட் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Share:

Related Articles