NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆயுதங்களுடன் ரஷ்யாவை அடைந்த கிங் !

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினை சந்தித்துப் கலந்துரையாட ரஷ்யா புறப்பட்ட நிலையில், இன்று ரஷ்யாவை வந்தடைந்துள்ளார்.

கிம் ஜாங்-உன் பயணப்படும் புகையிரதத்தில் ரஷ்யாவுக்கு அளிக்கவிருக்கும் ஆயுதங்கள் ஏற்றப்பட்டுள்ளதாகவும், இந்த கவச புகையிரதம் ரஷ்யாவை நோக்கி புறப்பட்டிருப்பது, ரஷ்யா – வடகொரியா இடையே வளர்ந்து வரும் இராணுவ ஒத்துழைப்பை பிரதிபலிப்பதாக உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிம், பியோங்யாங்கிலிருந்து ரயில் மூலம் புறப்பட்டிருப்பதாகவும், அந்தபுகையிரதத்தில் மூத்த அதிகாரிகள், ஆளும் கட்சியின் முக்கிய தலைவர்கள், இராணுவ வீரர்கள் இருப்பதாகவும் செவ்வாயன்று இரு தலைவர்களின் சந்திப்பு நிகழும் என்றும் வடகொரியாவின் அதிகாரப்பூர்வ ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

Share:

Related Articles