NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இங்கிலாந்து அணி சார்பில் ஹட்ரிக் விக்கெட் எடுத்த முதல் வீரர் ஜோர்டான்!

இங்கிலாந்து அணி சார்பில் T20 போட்டிகளில் ஹட்ரிக் விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டான் படைத்துள்ளார்.

பார்படாஸ், பிரிட்ஜ்டவுன், கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியின் போது, கிறிஸ் ஜோர்டான் இந்த சிறப்பு சாதனையை நிகழ்த்தினார்.

நேற்யைப் போட்டியில் அமெரிக்க அணியை வீழ்த்திய இங்கிலாந்து அரையிறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதிப் பெற்றதுடன், அமெரிக்கா சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 19வது ஓவரை வீசிய போது, கோரி ஆண்டர்சன், அலி கான், நோஸ்துஷ் கென்ஜிகே மற்றும் சவுரப் நேத்ரவல்கர் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதில் கோரி ஆண்டர்சன் தவிர ஏனைய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

2021 T20 உலகக் கிண்ண போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய கர்டிஸ் கேம்ஃபருக்குப் பிறகு T20 உலகக் கிண்ணப் போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

18வது ஓவரின் முடிவில் அமெரிக்க அணி 115/6 என்ற நிலையில் இருந்தது, ஜோர்டான் தனது கடைசி ஓவரில் எஞ்சிய அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles