NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இங்கிலாந்து தலைமை பயிற்சியாளரும் பதவி விலகினார்.

சிறிலங்கா கிரிக்கெட் அணியின் தலைமைப்பயிற்சியாளரான இங்கிலாந்தின் கிறிஸ் சில்வர்வுட் அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

அவரது பதவிவிலகல் தொடர்பில் சிறிலங்கா கிரிக்கெட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் தனது பயிற்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் கிறிஸ் சில்வர்வுட் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக பணியாற்றிய இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவும் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles