NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இங்கிலாந்து விமான நிலையத்தில் பாரிய தீ விபத்து!

இங்கிலாந்தின் பெட்போர்ட்ஷையர் மாகாணத்தின் முக்கிய நகரில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு குறித்த பகுதியில் கார் நிறுத்தப்பட்டிருந்த கட்டடத்தின் 3வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் கட்டடம் முழுவதும் தீ பரவியுள்ளது.

தீயணைப்பு படையினர் 15க்கும் மேற்பட்ட வாகனங்களில் குறித்த பகுதிக்கு விரைந்தனர். பொலிஸாரின் உதவியுடன் தீ பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் 1500க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் கருகி முற்றிலும் சேதமடைந்துள்ளன. 

குறித்த விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குள்ள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles