(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பிரத்தியேக நேர்காணல் முதல் முறையாக இலங்கையில் தமிழ் FM அலைவரிசையின் அனுசரணையில் இடம்பெற்றது.
‘அட்டக்கத்தி’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சந்தோஷ் நாராயணன் இன்று முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம்வந்துகொண்டு இருக்கிறார்.
அந்தவகையில், அண்மையில் இலங்கைக்கு வருகைதந்திருந்த அவர் தமிழ் FMக்கு வழங்கியிருந்த விசேட நேர்காணலில் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.
தனது மனைவியின் சொந்த ஊரான யாழ்ப்பாணத்தில் விரைவில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுருப்பதாகவும், இலங்கையர்களுக்கு பிடித்த வகையிலான பாடல்களை இசையமைக்க திட்டமிட்டுள்ளது போன்ற பல விடயங்கள் தொடர்பில் தமிழ் எப்.எம் பிரதானி திருமதி.ஹோஷியா அணோஜன் நடத்திய அந்த விசேட நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.
நேர்காணலை முழுமையாக பார்வையிட இந்த Linkஐ கிளிக் செய்யவும்..