NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இணையத்தை கலக்கி வரும் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமண அழைப்பிதழ்!

தொழில் அதிபர் முகேஷ் அம்பானி, நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சென்டுக்கும் எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.

இவர்களின் திருமணத்துக்கு முந்தைய ப்ரீ வெட்டிங் நிகழ்வுகள் பல திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் ஒன்று கூட மூன்று நாட்களுக்கு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில் இவர்கள் திருமண நாள் நெருங்கி வருகின்ற நிலையில், அவர்களின் திருமண அழைப்பிதழ் இணையத்தை கலக்கி வருகிறது.

குறித்த அழைப்பிதலானது, கோவிலை ஒத்த அமைப்புடைய ஒரு பெட்டிக்குள் அதனை திறந்ததும் உள்ளே விபரங்கள் அடங்க தெய்வீக உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் அழைப்பிதழை திறந்ததும் மங்கள இசை ஒலிக்கிறது.

திருமண அழைப்பிதழ் அட்டையில் விநாயகர், விஷ்ணு, லட்சுமி, ராதா-கிருஷ்ணா மற்றும் துர்கை உள்ளிட்ட பல இந்து தெய்வங்களின் படங்கள் உள்ளன.

இந்து கடவுள்களின் படங்களுடன் வண்ண வண்ண அட்டைகளில் திருமண நிகழ்வு குறித்த தகவல்கள்மற்றொரு சிறு பெட்டியில் தங்கம். வெள்ளி முலாம் பூசப்பட்ட கடவுள் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

விலையுயர்ந்த பட்டு துணிகள், உலர் பழங்கள் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன. கோவில் போன்றதொரு வடிவில் பெட்டியொன்று உள்ளது. அதில் ஹிந்தியில் மந்திரங்கள் ஒலியுடன் தங்க விக்ரஹம், பட்டு வஸ்திரம், வெள்ளி கோவில் விமானம் என பிரமாண்டமாக காட்சியளிக்கிறது.

இந்த காணொளியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த திருமண அழைப்பிதழ் சினிமா, அரசியல், தொழிலதிபர்கள் என முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share:

Related Articles