NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியாவின் நியாயமான பாதுகாப்பு கரிசனைகளை இலங்கை பரிசீலிக்கும் – அமைச்சர் அலி சப்ரி

இந்தியாவின் நியாயமான பாதுகாப்பு கரிசனைகளை இலங்கை பரிசீலிக்கும், எனினும் இலங்கை ஒரு நாட்டுடன் மட்டும் தன்னை இணைத்துக் கொள்ளாது என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்தியா, இலங்கையின் மிகப் பெரிய அண்டை நாடு என்பதை இலங்கை மனதில் வைத்துக் கொள்ளும்.

இந்தியா எழுப்பும் சட்டபூர்வமான பாதுகாப்புக் கவலைகள் கவனத்தில் கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இந்தியா கருதக்கூடிய சீனக் கப்பல்களைத் திரும்பப் பெறுவது என்ற விடயம், இந்த பாதுகாப்பு கரிசனையில் உள்ளதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, பதிலளிக்க அலி சப்ரி மறுத்துவிட்டார் எனவும் தெரியவருகிறது.

மேலும், நிலைமைகளின் அடிப்படையில் அவற்றை பார்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Share:

Related Articles