பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய இராணுவம் தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில் வட இந்தியாவில் 200 இற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் ஸ்ரீநகர், லே, அமிர்தசரஸ் மற்றும் சண்டிகர் உட்பட சுமார் 18 விமான நிலையங்கள் இன்று தற்காலிகமாக மூடப்பட்டன.
ஜம்மு, பதான்கோட், ஜோத்பூர், ஜெய்சால்மர், சிம்லா, தர்மசாலா மற்றும் ஜாம்நகர் உள்ளிட்ட முக்கிய வட மற்றும் மேற்கு பகுதி விமான நிலையங்களில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. மேலும் அங்கு பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஆகாசா ஏர் மற்றும் பல வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இந்த பகுதிகளுக்கான சேவைகளை நிறுத்தின.
இண்டிகோ மாத்திரம் சுமார் 165 விமானங்களை ரத்து செய்துள்ளது. அத்துடன் டெல்லிக்கு புறப்படும் 35 விமானங்கள் நள்ளிரவு முதல் காலை வரை ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது