NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்திய அணிக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு!

இந்திய அணிக்கு எதிரான சரித் அசலங்க தலைமையிலான 16 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அணிக்கு விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் அனுமதி கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

T20 மற்றும் ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணி நேற்று இலங்கை வந்துள்ளது.

மூன்று T20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கண்டி மற்றும் கொழும்பில் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில், 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடந்து முடிந்த LPL தொடரில் சிறப்பாக விளையாடி சமிந்து விக்கிரமசிங்க அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

சரித் அசலங்க (தலைவர்), பத்தும் நிஷங்க, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, கமிந்து மெண்டிஸ், தசுன் சானக்க, வனிந்து ஹசரங்க, மகேஷ் தீக்ஷனா, மதிஷா பத்திரன, நுவன் துஷாரா, துனித் வெல்லாலகே, துஷ்மந்த சமிர, பினுர பெர்னாண்டோ, தினேஷ் சந்திமல், அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் சமிந்து விக்கிரமசிங்க ஆகியோர் அடங்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தலா மூன்று போட்டிகள் கொண்ட இரண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய தேசிய கிரிக்கெட் அணி நேற்று வந்தது.

முதலாவதாக, T20 போட்டிகள் எதிர்வரும் 27, 28 மற்றும் 30 ஆம் திகதிகளில் இரவு 07:00 மணிக்கு கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

அதனையடுத்து, ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஓகஸ்ட் 2, 4, 7 ஆகிய திகதிகளில் மதியம் 02.30 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles