NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தோனேசியாவில் பிறந்துள்ள அரிய வகையிலான காண்டாமிருகம்

அரிய வகையிலான சுமத்ரா காண்டாமிருகம் (Sumatran rhino) ஒன்று பிறந்துள்ளதாக இந்தோனேசியாவில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

(Delilah) என்ற பெண் காண்டாமிருகத்திற்கு பிறந்த 25 கிலோகிராம் (55 பவுண்டுகள்) ஆண் காண்டாமிருகத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பூங்காவில் பாதுகாப்புக் காவலர் ஒருவர் பிறந்த கன்று தனது தாயின் அருகில் கிடப்பதைக் கண்டதாக அந்நாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

விலங்கியல் வல்லுநர்களின் கூற்றுப்படி, சுமத்ரா காண்டாமிருகம் அனைத்து காண்டாமிருக வகைகளிலும் மிகச் சிறியது மற்றும் மிகவும் ஆபத்தான உயிரினமாகும்.

Share:

Related Articles