NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்று RCB – LSG அணிகள் மோதல்!

16ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் இன்று பெங்களுரு ரோயல் செலேஞ்சர்ஸ் அணியுடன், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோதுகிறது.

பெங்களுரு ரோயல் செலேஞ்சர்ஸ் அணி தனது ஆரம்ப ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை பந்தாடியது. இந்த ஆட்டத்தில் அணித்தலைவர் பிளிஸ்சிஸ், விராட் கோலி ஆகிய இருவரும் அரைச்சதம் அடித்தனர்.

சொந்த ஊரில் ஆடும் பெங்களுரு அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் ஆயத்தமாகி வருகிறது.

இதுவரை 3 ஆட்டங்களில் ஆடியுள்ள லக்னோ அணி 2 வெற்றி (டெல்லி, ஐதராபாத்துக்கு எதிராக), ஒரு தோல்வி (சென்னைக்கு எதிராக) என்று 4 புள்ளிகள் பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Related Articles