NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இரத்தினபுரி மாவட்டத்தில் காசநோய் அதிகமாகப் பரவும் அபாயம்!

இரத்தினபுரி மாவட்டத்தில் காசநோய் அதிகமாகப் பரவும் அபாயம் இனங்காணப்பட்டுள்ளது.

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் சுவாச நோய் நிபுணர் வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

காசநோய் தடுப்பு தொடர்பான பொது விழிப்புணர்வு குறித்து இன்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்துரைக்கையில், கடந்த வருடம் இலங்கையில் 331 காசநோயாளிகள் கண்டறியப்பட்டனர். இதில் 30 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 10 சதவீதமானோர் இந்நோய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகக் கண்டறியப்பட்டமை கவலைக்குரிய விடயம் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் வருடாந்தம் சுமார் 14,000 காசநோயாளிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டாலும், 10,000 பேர் மட்டுமே கண்டறியப்படுகின்றனர்.

சுமார் 4,000 நோயாளர்கள் பதிவாகாமல் இருப்பதற்கு அறியாமையே முக்கிய காரணம் என வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles