முப்பது ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த தனது மகளுக்கு பொருத்தமான “ஆவி மாப்பிளை” தேடி குடும்பத்தினர் பத்திரிக்கையில் விளம்பரம் செய்த விசித்திர சம்பவம் கர்நாடகாவில் பதிவாகியுள்ளது.
கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள குடும்பம் ஒன்றே இந்த விளம்பரத்தை கொடுத்துள்ளது.
குறித்தப் பகுதியில் “குலே மடிமே” என்ற இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு இடையேயான திருமணம் செய்துவைக்கும் நடைமுறையில் இருந்து வருகின்றது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இறந்துப்போன தனது மகளுக்கு, குலாலர் சாதி மற்றும் பங்கேரா கோத்திரத்தைச் சேர்ந்த மணமகளை தேடுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
30 ஆண்டுகளுக்கு முன் இறந்துப்போன மணமகன் இருந்தால் “குலே மடிமே” நிகழ்வை செய்ய தயாராக இருப்பதாக குறிப்பிட்டு தொடர்புகொள்ள வேண்டிய தகவலுடன் விளம்பரம் முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விளம்பரம் செய்யப்பட்டதில் இருந்து குறைந்தது 50 பேர் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளதாக விளம்பரம் செய்த குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சடங்குகளை செய்தவற்கான திகதியை விரைவில் முடிவுசெய்யவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஐந்து வருடங்களாக சடங்கிற்கு பொருத்தமான ஒருவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் குடும்ப உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
“விளம்பரத்தை பிரசுரித்த போது, நாங்கள் கேலி செய்யப்படுவோம் என்று நாங்கள் கவலைப்பட்டோம், ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, சடங்கு பற்றிய விழிப்புணர்வுக்கு வழிவகுத்தது.
குலே மடிமே
‘குலே மடிமே’ என்பது திருமணமின்றி இறந்த ஆன்மாக்களுக்கு நிறைவை அல்லது இரட்சிப்பின் உணர்வைத் தருகிறது என்ற நம்பிக்கையுடன் கடைப்பிடிக்கப்படும் ஒரு பாரம்பரிய நடைமுறையாகும்.
இந்த சடங்குகளை நடத்துவதன் மூலம், வருங்கால மணப்பெண்கள் அல்லது மணமகன்கள் பொருத்தமான பொருத்தங்களைக் கண்டுபிடிப்பதில் இருந்து தடைகள் நீக்கப்படும் என்று கருதப்படுகிறது.
இந்த நடைமுறையானது மூதாதையர் வழிபாட்டின் ஒரு பகுதியாகும், ஏனெனில் இது இறந்தவர்களுக்கு செய்யப்படும் சடங்கு.
குறிப்பிட்ட சடங்குகள் சாதியைப் பொறுத்து மாறுபடும் என்றாலும், ‘குலே மடிமே’ என்பது பொதுவாக வாழும் நபர்களுக்கான திருமண விழாவைப் போலவே நடத்தப்படுகிறது.