இலங்கைக்கான பயணத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட அமெரிக்க பாதுகாப்பு எச்சரிக்கையில், ஒரு குறிப்பிட்ட அச்சுறுத்தல் காரணமாக அறுகம்பை பகுதிக்கு மாத்திரம் செல்வதை தவிர்க்குமாறு மட்டுமே அமெரிக்க பிரஜைகளுக்கு வலியுறுத்தப்பட்டதாகவும், இலங்கைக்கு செல்ல தடை விதிக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.