NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கைக்கு தெற்கே கவிழ்ந்த சீன கப்பலில் இருந்து 14 சடலங்கள் மீட்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கடந்த16ஆம் திகதி அன்று இலங்கைக்கு தெற்கே கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடிக் கப்பலான ‘LU PENG YUAN YU 028’ என்ற கப்பலில் இருந்து 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மேலதிக மீட்பு பணிகளுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரைக்கமைய, இலங்கை கடற்படையின் ஆழ்கடல் தாக்குதல் கப்பலான ‘விஜயபாகு’, கடற்படையின் டைவிங் குழுவுடன் சீன மீன்பிடிக் கப்பல் விபத்துக்குள்ளான கடல் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles