(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கடந்த தசாப்தத்தில் இலங்கையில் அதிகளவான காட்டு யானை மரணங்கள் கடந்த 2022ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் 463 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக அதன் தேசிய இணைப்பாளர் கலாநிதி ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார்.
காட்டு யானைகளின் மரணங்களில் பெரும்பாலானவை மனித நடவடிக்கைகளினால் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்ட அவர், காட்டு யானைகளை பாதுகாக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்காவிட்டால் சுற்றுலாத்துறை மாத்திரமன்றி நாட்டிற்குள் ஒரு காட்டு யானைக்கூட மிஞ்சியிருக்காது எனவும் கவலை வெளியிட்டுள்ளார்.