இலங்கையில் புதிய எரிபொருள் விநியோக நிறுவனத்தை அவுஸ்திரேலியவை தளமாகக் கொண்ட யுனைடெட் பெட்ரோலியம் அவுஸ்திரேலியா நிறுவனம் (United Petroleum Australia) ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கவுள்ளது.
குறித்த தகவலை இலங்கை தனியார் பெட்ரோலியம் கூட்டுதாபனத்தின் பணிப்பாளர் கலாநிதி பிரபாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில், தற்போதுள்ள 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளடங்கலாக 50 இக்கும் மேற்பட்ட புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைக்கவுள்ளதாகவும் குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், நிறுவனமானது இலங்கையின் முதலீட்டுச் சபையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டதாகவும் மேலும் இந்த ஒப்பந்தம் இலங்கையில் பெட்ரோலிய பொருட்களை வழங்குவதற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.
இத்திட்டத்திற்கான மொத்த முதலீடு சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்குமெனவும், தொடங்குவதற்கு, அவர்கள் 12 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாகவும், மீதமுள்ள தொகையை ஒரு வருடத்திற்குள் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இலங்கையில் இயங்கும் போது, நிறுவனம் விலைப் போரில் ஈடுபடத் திட்டமிடவில்லை ஆனால் நுகர்வோருக்கு பல்வேறு நன்மைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதனடிப்படையில், பெட்ரோலியப் பொருட்களின் தரம் அவுஸ்திரேலியாவில் உள்ளதைப் போலவே இருக்குமெனவும் உயர் தரத்தைப் பராமரிப்பதில் வலுவான கவனம் செலுத்துகின்றதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.
மேலும், இந்த குழுமம் அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரில் பிற வணிகங்களையும் கொண்டுள்ள நிலையில் அவுஸ்திரேலியாவிற்கு வெளியே தங்கள் சில்லறை பெட்ரோலிய வணிகத்தை விரிவுபடுத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.