உலக முழுவதும் உள்ள ஊழியர்களில் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களை 2023ஆம் ஆண்டின் சிறந்த ஊழியர்களாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவுசெய்துள்ளது.
விமான பயணிகள் சேவைகள், விமான சரக்கு செயல்பாடுகள், இருக்கை முன்பதிவுகள், வினைத்திறன் மற்றும் நட்பு சேவைகள், தகவல் தொடர்பு சேவைகள் போன்றவை இந்த தெரிவில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.இதற்கான பரிசளிப்பு விழா கடந்த 15ஆம் திகதி சிங்கப்பூர் ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்றதுடன், விருதை பெற்றுக்கொள்வதற்காக சிங்கப்பூர் எயார்லைன்ஸின் கட்டுநாயக்க விமான நிலைய முகாமையாளர் தில்ருக்ஷி குடாலியனகே உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்றனர்.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உலகின் சிறந்த விமான நிறுவனமாக 11 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸிடம் 300 க்கும் மேற்பட்ட நவீன விமானங்கள் உள்ளன. மேலும் இந்நிறுவனம் உலகெங்கிலும் உள்ள 64 நாடுகளுக்கு நேரடி விமான சேவைகளை இயக்குகிறது.கொரோனா தொற்றுநோய் தீவிரமடைந்திருந்த காலப்பகுதியில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழு, அபாயமான சூழலுக்கு மத்தியில் இலங்கையில் ஆற்றிய சேவைகளை அங்கீகரிக்கும் வகையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு சமீபத்தில் “கிரிட்” விருதும் வழங்கப்பட்டது.