NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை கிரிக்கெட் நிறுவன அலுவலகத்துக்கு முன்னால் போராட்டம் நடத்த ஆயத்தம்?

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அலுவலகத்துக்கு முன்னால் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதாக அறியமுடிகிறது.

இலங்கை அணி நேற்று இடம்பெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடம் படுதோல்வியை சந்தித்திருந்தது.

அத்துடன் இந்தத் தொடரிலேயே இலங்கை அணி படுமோசமாக விளையாடி வருகிறது.

இந்நிலையில் அணியில் வினைத்திறனான மாற்றங்களை ஏற்படுத்த வலியுறுத்தி, இந்த போராட்டத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை பொது அமைப்பு ஒன்று சமூகவலைத்தளங்கள் ஊடாக மேற்கொண்டு வருவதாகவும் அறியக்கிடைகிறது.

Share:

Related Articles