NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை தூதுக்குழுவினர் – கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுக்கு இடையில் சந்திப்பு!

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமையிலான இலங்கை தூதுக்குழுவினர் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை வொஷிங்டனில் சந்தித்து கலந்துரையாடினர்.

வொஷிங்டனில் நடைபெற்ற உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய கூட்டத்தின் ஒரு பக்க சந்திப்பாக இந்த சந்திப்பு இடம்பெற்றது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இராஜாங்க அமைச்சர் சேமசிங்க இந்த சந்திப்பின் போது, பொருளாதார நெருக்கடியின் போது இலங்கை எதிர்கொண்ட சிரமங்களை சமாளிக்க ஆதரவளிக்க தலைமைத்துவத்தை வழங்கிய சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவிற்கு நன்றிகளை தெரிவித்தார்.

கடன் நிலைத்தன்மையை அடைவதற்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் இலட்சிய சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து அமுல்படுத்தும் அதேவேளையில், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை நிறைவு செய்வதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தியதாக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.

நெருக்கடியிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களைக் கட்டியெழுப்புவதன் மூலம் இலங்கையின் சர்வதேச பங்காளிகளின் ஆதரவுடனும் நம்பிக்கையுடனும் வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இந்த நேரத்தில் அரசாங்கத்தின் விருப்பத்தையும் அர்ப்பணிப்பையும் அவர்கள் மீண்டும் வலியுறுத்துவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.

Share:

Related Articles