NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் காற்று மாசுக் குறியீடு 50ஐ தாண்டியிருப்பதால், மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, இது குறித்து கவனம் செலுத்துமாறு அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த காற்று மாசு உணர்திறன் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் தரக் குறியீட்டின் படி, இன்று கொழும்பின் காற்று மாசு 127 ஆக பதிவாகியுள்ளது.

இவ்வாறான நிலையில், காற்று மாசு சுட்டெண், காலி கராப்பிட்டியில் 90 ஆகவும், புத்தளத்தில் 88 ஆகவும், குருநாகல் மற்றும் அனுராதபுரத்தில் 86 ஆகவும் பதிவாகியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles