NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை விவாகரத்து சட்டத்தில் மாற்றம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் வைத்து நேற்று (21) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நவீன சமூகத்தினரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

நபர் ஒருவர் தனது மனைவி மற்றவர்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருப்பதைக் கண்டறியும் போது, விவாகரத்துக்கு அழைப்பு விடுக்க இலங்கைச் சட்டங்களில் ஏற்பாடுகள் இல்லை. எனவே விவாகரத்து தொடர்பான சட்டங்களையும் மாற்றியமைக்க நாம் திட்டமிட்டுள்ளோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles