2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை 503 மில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில், 275.1 மில்லியன் டொலர்கள் முதன்மைக் கடன் திருப்பிச் செலுத்துதலாகவும், 227.9 மில்லியன் டொலர்கள் வட்டித் தொகையாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, 2024 ஜூன் மாத இறுதிக்குள், அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் அளவு 37.5 பில்லியன் டொலர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடைக்காலக் கொள்கைக்கு இணங்க, பாதிக்கப்பட்ட இருதரப்பு மற்றும் வணிகக் கடனாளிகளின் வெளிநாட்டுக் கடன் சேவை 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை செலுத்தப்படாத கடன் தவணைகளின் தொகை 5,670 மில்லியன் டொலர்களாகவும், வட்டித் தொகை 2,527 மில்லியன் டொலர்களாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிதியமைச்சகத்தால் வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டின் மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.