NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழ்ப்பாணத்தில் இருந்து இலண்டன் சென்ற ஸ்டூடியோ உரிமையாளருக்கு 11 வருட சிறை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலண்டனில் சீனப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்காக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞருக்கு 11 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து இலண்டன் ஹெண்டன் கிரவுன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து 4 வருடங்களுக்கு முன்னர் இலண்டன் சென்ற 38 வயதுடைய நபர் இலண்டன் ப்ரோம்ப்டன் வீதியில் புகைப்பட ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வருவதாகவும், புகைப்படம் எடுக்க வந்த சீன யுவதி, தனக்கு புகைப்படம் எடுக்கத் திரும்ப வரும் திகதியைக் கொடுத்த சந்தேகநபர், அன்றைய தினம் குறித்த யுவதிக்கு மதுபானம் அருந்தக்கொடுத்து, புகைப்பட ஸ்டுடியோவில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து பஸ் தரிப்பிடத்தற்குக்கூட்டிச் சென்று பஸ்ஸில் ஏற்றி விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான இறுதி விசாரணை இந்த ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் திகதி கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், குறித்த நபருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles