NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கொழும்பிலிருந்து இரு பௌத்த பிக்குகளை பொதுத் தேர்தலில் களமிறக்கியது!

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கொழும்பிலிருந்து இரு பௌத்த பிக்குகளை பொதுத் தேர்தலில் களமிறக்கியுள்ளது.

இவ்வாறு பௌத்த பிக்குகளை களமிறக்கிய நிலையில்இ பௌத்த பிக்கு ஒருவரின் பெயரை முன்னிறுத்திய முதல் தமிழ் கட்சி என்ற வரலாற்று சாதனைப் படைத்துள்ளது.

மேலும் இந்நிகழ்வில்இ கொழும்பு மாவட்ட வேட்பாளர்களின் அறிமுகம் நேற்று இடம்பெற்றதுடன் இந்நிகழ்விற்கு நவோதய மக்கள் முன்னணியின் முன்னாள் ஊடக செயலாளர் வீரசிங்கம் ஜெய்சங்கர் மற்றும் வேட்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய கிரிப்பன்னாரே விஜித தேரர் மற்றும் வணக்கத்திற்குரிய உடவளவே ஜினசிறி தேரர் ஆகியோரே இவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு உள்ளனர்.

Share:

Related Articles