NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இழப்பீட்டு விவகாரம் – இதுவரை செலுத்தப்பட்டுள்ள தொகை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகையான ரூ.100 மில்லியனில் இருந்து இதுவரை 15 மில்லியன் ரூபாய் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர 75 மில்லியன் ரூபா இழப்பீட்டு தொகையில், 1.75 மில்லியன் ரூபாவை இதுவரை செலுத்தியுள்ளார்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபா இழப்பீட்டு தொகையில், ஒரு மில்லியன் ரூபாவை இதுவரை செலுத்தியுள்ளார்

முன்னாள் தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் சிசிர மெண்டிஸ் 10 மில்லியன் ரூபா இழப்பீட்டு தொகையில், 5 மில்லியன் ரூபாவை இதுவரை செலுத்தியுள்ளார்

எனினும், முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுத் தலைவர் நிலந்த ஜயவர்தன ரூ.75 மில்லியன் இழப்பீட்டு தொகையை செலுத்த வேண்டியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான இழப்பீட்டு நிதியை ஜூலை 12, 2023க்கு முன்னதாக வழங்குமாறு உயர் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டிருந்தது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், கத்தோலிக்க மதகுருமார்கள் மற்றும் பலர் தாக்கல் செய்த 12 மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 பேர் கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னரே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles