NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலகக்கோப்பையில் இறுதிப் போட்டியில் ஒருமுறைக் கூட நுழையாத தென்னாப்பிரிக்க அணி!

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க அணி இறுதிப்போட்டியை ஒரு முறை கூட எட்டியதில்லை. அந்த பரிதாபம் இந்த முறையும் தொடருகிறது.

அந்த அணி அரை இறுதியோடு நடையை கட்டுவது இது 5ஆவது முறையாகும்.

ஏற்கனவே 1992ஆம் ஆண்டில் இங்கிலாந்திடமும், 2007ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவிடமும், 2015ஆம் ஆண்டில் நியூசிலாந்திடமும் அரை இறுதியில் தோற்று இருந்தது.

1999ஆம் ஆண்டு அரை இறுதியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் டையில் முடிந்தாலும் சூப்பர் 6 சுற்று ரன்ரேட்டில் பின்தங்கியதன் அடிப்படையில் தென்னாப்பிரிக்கா வெளியேற்றப்பட்டதும் நினைவுக்கூரத்தக்கது.

தோல்வி குறித்து தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா கூறியதாவது, தோல்வியை வார்த்தைகளால் விவரிப்பது கடினமானது. இறுதிப் போட்டிக்கு செல்லும் ஆஸ்திரேலியா அணிக்கு வாழ்த்துக்கள். ஆட்டத்தின் பெரும் பகுதியில் அவர்கள் சிறப்பாக விளையாடினர். அவர்கள் வெற்றிக்கு தகுதியானவர்கள் பேட்டிங்இ பந்து வீச்சில் சிறப்பான தொடக்கத்தை நாங்கள் பெறாததால் தோல்வியை சந்தித்தோம்.

மில்லர் கிளாசன் சிறப்பாக விளையாடினார். ஆனல் கிளாசன் இறுதி வரை விளையாட முடியாமல் போனது பின்னடைவை ஏற்படுத்தியது. வெற்றிக்காக நாங்கள் கடுமையாக போராடினோம். குயின்டன் டி காக் போன்ற ஒரு வீரர் அணியில் இருந்து விலகுவது கடினமாக இருக்கிறது. அவர் தென் ஆப்பிரிக்கா அணியின் சகாப்தமாக இருந்து வெளியேறுகிறார்.

Share:

Related Articles