NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான திகதி அறிவிப்பு..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அடுத்த ஆண்டு ஜுன் மாதம் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், தொடரின் இறுதிப் போட்டிக்கான திகதி விபரங்கள் வெளியிட்டுள்ளது.

அதன்படி இறுதிப்போட்டியானது லண்டனில் உள்ள புகழ்பெற்ற லோர்ட்ஸ் மைதானத்தில் 2025 ஜுன் மாதம் 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையில் விளையாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 16ஆம் திகதி மேலதிக நாளாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்காக முதல்முறையாக லோர்ட்ஸ் மைதானம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 2021ஆம் ஆண்டு சவுதம்படனும், 2023ஆம் ஆண்டு ஓவலும் தெரிவு செய்யப்பட்டு இறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த போட்டிகளில் முறையே நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் டெஸ்ட் சாம்பியன்களாகி இருந்தன.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் தரவரிசை அட்டவணையில் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles