NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலக மது ஒழிப்பு தினம் இன்று!

உலக மது ஒழிப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

மது அதை அருந்துபவர்களுக்கு மட்டும் இன்றி அவர்களை சார்ந்து இருப்பவர்களையும் இது பாதிக்கிறது.

உலகளாவிய ரீதியில் வருடத்திற்கு மது அருந்தி 3 மில்லியன் கணக்கானோர் உயிரிழப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

முன்பு நாட்டின் வளர்ச்சி கல்வியில் இருந்தது, ஆனால் இப்போது மதுபானசாலைகளிலேயே தங்கி உள்ளது. நம் நாடு முன்னேற்ற பாதையில் செல்வதற்கு மது ஒழிப்பு அவசியமாகிறது.

மது அருந்துவதால் மூளை மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்பிற்கு உள்ளாகுவதுடன், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகளவில் காணப்படுகிறது.

அடிக்கடி மது அருந்துபவர்களுக்கு மனநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்தென ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிறது.

மது ஒழிப்பு சட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இது சாத்தியமாகும்.

இன்றைய சமுதாயத்தில் அதிக அளவிற்கு இருக்கும் தீய குணங்கள், வன்முறைகள், தவறான செயல்கள் போன்றவற்றை அடியோடு அழிப்பதற்கு மது ஒழிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகின்றது.

மதுவால் ஏற்படும் சாலை விபத்துகளை தடுப்பதற்கு மது பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

அத்துடன், மதுவை ஒழிப்பது இந்த சமூகத்தில் உள்ள மக்கள் அனைவரின் கடமையாகும்.

இதேவேளை உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் இன்று மூடுமாறு மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.

மதுபானம் அருந்துவதால் உலகளாவிய ரீதியில் வருடத்துக்கு 3 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழப்பதுடன்இ மது அருந்துவதால் இலங்கையில் நாளொன்றுக்கு 50 பேர் வரையில் மரணிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடுஇ மதுபானத்துடன் தொடர்புடைய குற்றங்கள் மற்றும் போதைப்பொருளுடன் தொடர்புடைய முறைப்பாடுகளை அறிவிப்பதற்கு மதுவரித் திணைக்களத்தின் செயற்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ள 1913 என்ற தொலைபேசி இலக்கம் 24 மணித்தியாலங்களும் பொதுமக்களுக்காகத் செயற்பாட்டில் இருக்கும் என மதுவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles