எகிப்து நாட்டின் கிசா மாகாணம் கெர்டாசா நகரில் உள்ள குடியிருப்பு கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த கட்டடத்தில் வசித்து வந்த பலர் வசித்து வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட இந்த அனர்த்தத்தினால் கட்டட இடிபாடுகளுக்குள் பலர் சிக்குண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் 3 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு கொள்கலன் வெடித்ததில் இந்த விபத்து நேர்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.