NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எஜமானை எதிரியாக நினைத்து துப்பாக்கியால் சுட்ட ரோபோ நாய்..!

ரோபோ நாய் ஒன்று சோதனை முயற்சியில் பிரபல யூடியூபர் டாரன் ஜாசனை நெருப்புத் துப்பாக்கியால் சுட்ட காட்சி இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

‘ஸ்பீடு’ என்று அறியப்படும் டாரன் ஜாசன், சமீபத்தில் ஒரு ரோபோ நாய்க்குட்டியை வாங்கி அதை நேரடியாக இணையத்தள காணொளியில் பரிசோதித்துப் பார்த்தார்.

முதலில் அவர் ரோபோ நாய்க்கு கை கொடுக்கும் போது நாயும் முன்னங்காலைத் தூக்கிக் கை கொடுத்தது. பின்னர் அவர் பின்னோக்கி பல்டி அடித்தபோது, நாயும் துள்ளிக் குதித்தது.

அதன் பின்னர் ரோபோ நாயில் இணைக்கப்பட்டுள்ள துப்பாக்கி பொத்தானை அழுத்தி விட்டு, குரைக்கும்படி கட்டளையிட்டார். ஆனால் ரோபோ நாய் எதிர்பாராதவிதமாக, துப்பாக்கியை இயக்கி எஜமானரை எதிரியாக நினைத்துச் சுடத் தொடங்கியது.

துப்பாக்கியிலிருந்து நெருப்பு பிழம்பு வெளியேறி டாரன் ஜாசனை தாக்கியது. இதை எதிர்பாராத அவர் அருகிலிருந்த நீச்சல் குளத்தில் குதித்தார்.

அப்போதும் ரோபோ நாய் அவரை நோக்கித் தொடர்ந்தும் சுட்டதில் ஒருவழியாக அதன் பார்வையிலிருந்து தப்பி, பின்புறமாக வந்து அதன் துப்பாக்கி பொத்தானை நிறுத்தியபிறகுதான் ரோபோ நாய் சுடுவதை நிறுத்தியது.

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அவர் காயம் அடையாமல் தப்பியுள்ளார்.

Share:

Related Articles