NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எந்த தேர்தலாக இருந்தாலும் எதிர்கொள்ள தயார் – மஹிந்த

ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத்தேர்தல் எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு பொதுஜன பெரமுன தயாராக உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (20) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மே தினம் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாக இருப்பினும் மே தின நிகழ்வு பாரியளவிலான மக்கள் தொகையுடன் நடத்தப்படும் எனவும், காலிமுகத்திடல் தமக்கு வழங்கப்படாது என்றபோதும், அதனை பூரணப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எந்தவொரு தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அதனை எதிர்கொள்வதற்கு தயார் என தெரிவித்த மஹிந்த, ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும், போதுமான வேட்பாளர்கள் தங்களிடம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share:

Related Articles