NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எரிபொருள் விற்பனை விவகாரம் – சினோபெக் நிறுவனத்தின் அறிவித்தல் வெளியானது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்வதற்கு வேறு வெளி நிறுவனங்களை பயன்படுத்துவதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானது என சீனாவின் சினோபெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்வது தொடர்பில் சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக அண்மையில் அரசாங்கம் அறிவித்தது.

இதனையடுத்து, சினோபெக் நிறுவனம் எரிபொருள் விற்பனை செய்வதற்கு வேறு வெளி நிறுவனங்களை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகின. எனினும் சினோபெக் நிறுவனம் இதனை மறுத்துள்ளது.

தமது எரிவாயு நிலையங்களுக்கான சேவை உரிமைகளை வேறு எந்த தரப்பினருக்கும் மாற்ற விரும்பவில்லை என்றும், தனது வர்த்தக நாமத்தின் நற்பெயரைப் பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் சினோபெக் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles