NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எரிபொருள் விலைகளில் திருத்தம்?

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

எரிபொருள் விலை இன்று (31) நள்ளிரவு முதல் திருத்தம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இம்முறையும் எரிபொருள் விலையை குறைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இதேவேளை, தற்போது QR முறையின் ஊடாக வெளியிடப்படும் எரிபொருள் கோட்டா நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கான தற்போதைய 7 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீட்டை 14 லீற்றராக அதிகரிக்கவுள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

முச்சக்கரவண்டிக்கான 15 லீற்றர் எரிபொருள் கோட்டா 22 லீற்றராகவும், சாதாரண முச்சக்கரவண்டிக்கு 08 லீற்றராக இருந்த எரிபொருள் கோட்டா 14 லீற்றராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

30 லீற்றராக இருந்த காரின் எரிபொருள் கோட்டா 40 லீற்றராகவும், வேனுக்கு வழங்கப்பட்டு இருந்த எரிபொருள் கோட்டா 30 லீற்றரிலிருந்து 40 லீற்றராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பஸ்களுக்கு 60 லீற்றராக இருந்த எரிபொருள் ஒதுக்கீடும் இன்று நள்ளிரவு முதல் 125 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது. 75 லீற்றராக இருந்த லொறிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 125 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles