NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒரு ஓட்ட வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி!

16ஆவது ஐபிஎல் தொடரில் 68ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோதின. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய லக்னோ அணி கொல்கத்தா அணியினரின் அபார பந்துவீச்சில் லக்னோ சிக்கி விரைவில் விக்கெட்டுகளை இழந்தது. 

இதனால் 73 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அடுத்து இறங்கிய ஆயுஷ் பதோனியுடன், நிகோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். 6வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 74 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் பதோனி 25 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். 

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிகோலஸ் பூரன் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 58 ஓட்டத்தில் வெளியேறினார். இறுதியில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

கொல்கத்தா சார்பில் ஷர்துல் தாக்குர், வைபவ் அரோரா, சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 177 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. 

இதில், அதிகபட்சமாக அரை சதம் அடித்த ரிங்கு சிங் 67 ஓட்டங்கள் எடுத்து அவுட்டாகாமல் விளையாடினார். தொடர்ந்து, ஜாசன் ராய் 45 ஓட்டங்கள், வெங்கடேஷ் ஐயர் 24 ஓட்டங்களும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 10 ஓட்டங்களும், நிதிஷ் ராணா 8 ஓட்டங்களும், ஆண்டிரே ரூசல் 7 ஓட்டங்களும், ஷார்துல் தகூர் 3 ஓட்டங்களும், சுனில் நரைன் ஒரு ஓட்டமும் எடுத்தனர். 

இறுதியாக களமிறங்கிய வைபவ் அரோரா ஒரு ஓட்டம் மட்டுமே எடுத்தார். ஆட்டத்தின் முடிவில் கொல்கத்தா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ஓட்டங்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

இதன்மூலம் ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றிப் பெற்றது.

Share:

Related Articles