NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒலிம்பிக் தொடரின் Countdown இன்றுடன் ஆரம்பம்!

ஒலிம்பிக் தொடரின் Countdown நிகழ்வானது இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்கின் 33 ஆவது தொடரானது பிரான்ஸ் தலைநகர் பரிஸில் எதிர்வரும் ஜூலை மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், ஃபிஃபாவின் உலகளாவிய கால்பந்து மேம்பாட்டுத் தலைவர் அர்சென் வெங்கரினால் ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டதோடு 30 நாட்கள் கவுண்ட் டவுன் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றாலும், கிரேக்கத்தின் தென் பகுதி நகரான ஒலிம்பியாவில் பாரம்பரிய முறையில், நடனம், நாடகம் போன்ற கலைவிழாக்கள் நடத்தி இச்சுடர் ஏற்றப்படும்.

இதன்போது நீளமான உடையணிந்த வீராங்கனை ஒருவர், ஒளிக்கான கிரேக்கக் கடவுள் அபோலோவிடம் பிரார்த்தனை செய்த பிறகு, நிலத்தில் மண்டியிட்டு சூரிய ஒளியால் ஒலிம்பிக் சுடரை ஏற்றிவைப்பார்.

இந்த சுடரானது உலக நாடுகளை சுற்றி வந்து இறுதியில் போட்டி நடைபெறும் நாட்டை வந்தடையும்.

Share:

Related Articles