NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கட்சியின் முடிவே இறுதித் தீர்மானம் – நாமல்

எந்தவொரு கட்சிக்குள்ளும் தேர்தலை விரும்புபவர்களும் விரும்பாதவர்களும் உள்ளனர், ஆனால் கட்சியின் முடிவே , இறுதித் தீர்மானம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது பொதுத் தேர்தலா? ஜனாதிபதித் தேர்தலா? முதலில் இடம்பெறும் என்ற குழப்பம் நிலவி வருகிறது.

பலரும் பலவாறு கருத்து தெரிவித்து வரும் நிலையில் தேசிய மக்கள் சக்தி எந்தவொரு தேர்தலுக்கும் தயாராக உள்ளது , ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வருகிறது. பொதுஜன பெரமுன பொதுத் தேர்தலை கோருகிறது.

இந்நிலையில் , பாராளுமன்ற உறுப்பினர்கள் 113 பேர் கையொப்பமிட்டால் பாராளுமன்ற தேர்தலை முதலில் நடத்தலாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் காலத்தில் குறித்த நேரத்தில் தேர்தல் இடம்பெற்றது. பொதுத்தேர்தல் ஒன்று நடைபெற்றால் உண்மையான மக்கள் கருத்தை பார்த்துக்கொள்ளலாம் என நாமல் வலியுறுத்தியுள்ளார்.

“ கட்சிக்குள் தனிப்பட்ட கருத்துகள் இருக்கலாம், தேர்தல் வேண்டாம் என்று சொல்லலாம், ஆனால் அவை தனிப்பட்ட கருத்துக்கள் மட்டுமே.தேர்தலில் என்ன நடத்த வேண்டும் என்பதை கட்சி முடிவு செய்தால், அனைவரும் ஆதரிக்க வேண்டும்.” என தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles