NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கண்டியில் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான மேலதிக டிக்கெட் விற்பனை ஆரம்பம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தொடரின் முக்கிய போட்டிகளாக கருதப்பட்ட கண்டியில் நடைபெறவுள்ள இலங்கை vs பங்களாதேஷ் மற்றும் கண்டியில் நடைபெறவுள்ள இந்தியா vs பாகிஸ்தான் ஆகிய போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்பனையாகி விட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது.

அதனை தொடர்ந்து தற்போது ஆசியக் கிண்ணப் போட்டித் தொடரில் இலங்கையில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கான மேலதிக டிக்கெட்டுகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கான மேலதிக டிக்கெட்டுகளை விற்பனை செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

அதற்கமைய https://pcb.bookme.pk/ என்ற இணையத்தளம் மூலம் ரசிகர்கள் தங்களது இருக்கைகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

Share:

Related Articles