கனடாவில் மீண்டும் குரங்கம்மை நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குரங்கம்மை நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பொருத்தமானவர்கள் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளுமாறும் அந்த நாட்டு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த வருடத்தில் கடந்த ஜூலை மாதம் வரையில் மாத்திரம் 93 பேர் குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் கனடா நாட்டு சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.







