NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கனடாவிற்கு எதிராக meta எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை…!

கனடாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் Facebook மற்றும் instagram இல் செய்தி கிடைப்பது நிறுத்தப்படும் என meta நிறுவனம் அறிவித்துள்ளது.

கனடாவின் செய்தித்துறை பாதிப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை கருத்தில் கொண்டே meta நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கனடாவில் கடந்த பத்து வருடங்களில் நூற்றுக்கணக்கான செய்தி வெளியீட்டு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், போராடி வரும் கனடாவின் செய்தித்துறையை ஆதரிக்க முடிவு செய்த கனடா அரசு, ஒரு புதிய சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ளது.

மேலும், இதன்படி குறித்த சட்ட மூலத்தில், டிஜிட்டல் துறையின் முன்னணி நிறுவனங்கள் தங்களது செய்தி உள்ளடக்கத்திற்காக கனடா அரசிற்கு பணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நிறுவனங்கள் தங்கள் தளங்களில் பகிரப்படும் செய்திகள் மற்றும் தகவல்களுக்காக கனடா நாட்டு “அவுட்லெட்”களுடன் நியாயமான வணிக ஒப்பந்தங்களைச் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்ட மூலத்தை பின்பற்றாத நிறுவனங்கள் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என கனடா அரசு எச்சரித்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள meta நிறுவனம், தனது சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகளை கனடா நாட்டிற்குள் கிடைப்பதை தடை செய்வதற்கான முடிவை எடுத்துள்ளது.

மேலும், google நிறுவனமும் இதேபோன்ற முடிவை எடுப்பது பற்றி பரிசீலனை செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளதுகடந்த மாதம் சில பயனர்களுக்கான கனடா நாட்டின் செய்தி உள்ளடக்கத்தைத் தடுப்பதற்காக மெட்டா மேற்கொண்ட சோதனை ஓட்டத்திற்கு எதிராக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

Share:

Related Articles