NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கம்பளை யுவதி கொலை வழக்கு – சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கம்பளை – எல்பிடிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியான பாத்திமா முனவ்வரானவின் கொலை தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளது.

இந்த அறிக்கையில் குறித்த யுவதி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை எனவும், கழுத்தை நெரிக்கப்பட்டதாலேயே மரணம் நிகழ்ந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான இளைஞர் கம்பளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில், அவரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்க உத்தரவிடப்பட்டது.

Share:

Related Articles