NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கரடியனாறு, வெல்லாவெளி, களுவாஞ்சிகுடியில் இரு தினங்களில் 18 மாடுகள் திருட்டு..!

மட்டக்களப்பு கரடியனாறு, வெல்லாவெளி, களவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிலுள்ள பிரதேசத்தில் கடந்த இரு தினங்களில் மாட்டு பட்டியில் இருந்த 7 பசுமாடுகள் 11 எருமை மாடுகள் உட்பட 18 மாடுகள்  திருட்டுப் போயுள்ளதாக இன்று சனிக்கிழமை (12)  அந்தந்த பொலிஸ் நிலையங்களின் பொலிசார் தெரிவித்தனர்.

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மாட்டுபட்டியில் வழமைபோல வியாழக்கிழமை இரவு எருமை மாடுகளை பட்டியில் அடைத்திருந்த நிலையில் வெள்ளிக்கிழமை 11 ம் திகதி சென்று பார்த்தபோது அங்கிருந்த 11 எருமை மாடுகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் மாட்டின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்,

அதேவேளை வியாழக்கிழமை (10) திகதி வெல்லாவெளி பிரதேசத்தில் 3 பசுமாடுகளும் நேற்று வெள்ளிக்கிழமை 11 திகதி ஒரு பசுமாடு உட்பட 4 மாடுகள் தீரட்டுப் போயுள்ளதாகவும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பிரிவில் 3 பசுமாடுகள் திருட்டுப்போயுள்ள தையடுத்து 18 மாடுகள்  இரு தினத்தில் திருட்டுப் போயுள்ளது.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Share:

Related Articles