NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கலவானை – இரத்தினபுரி வீதியில் பாரிய மண்சரிவு!

கலவானை – இரத்தினபுரி பிரதான வீதியின் கலவான எல்லையின் ஆரம்பத்தில் மண்சரிவை தடுப்பதற்காக சுவர் ஒன்றை நிர்மாணிக்கும்போது இன்று (31) வீதியின் ஒரு பகுதி மீண்டும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கடந்த 29ஆம் திகதி, கலவானை எல்லையில் 28-1 மைல்கல்லுக்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு மீண்டும் செயற்பாட்டு நிலையை அடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் இரத்தினபுரி அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.

குறித்த அவதான நிலைமைக்கு தீர்வு குறித்து தேசிய கட்டட மற்றும் ஆராய்ச்சி நிறுவன ஒப்பந்ததாரருக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

குறித்த வீதியின் பாதியளவு இடிந்து வீழ்ந்துள்ளதாக பிரதேசவாசிகள் இரத்தினபுரி அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அறிவித்ததையடுத்து தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

வீதியில் மண்சரிவு அபாயத்தைத் தடுக்கும் வகையில் இன்று தடுப்பணை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு அபாயம் தடுக்கப்பட்டுள்ளதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் இரத்தினபுரி அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்த இடத்தில் மண்சரிவு ஏற்படாமல் தடுப்பதற்கான தடுப்புச்சுவர் அமைக்கும் பணி கடந்த 24ஆம் திகதி தொடங்கியதையடுத்து, கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, சாலையின் ஒரு பகுதி மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

Share:

Related Articles