அமெரிக்கா – கலிபோர்னியாவில் சிறிய ரக விமானம் ஒன்று இன்று (03) வர்த்தக கட்டடமொன்றில் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 18 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒற்றை இயந்திரம் கொண்ட RV-10 ரக சிறிய விமானம் ஒன்றே விபத்திற்குள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.