NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காங்கேசன்துறைக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையிலான சரக்குக் கப்பல் சேவையை நடத்த அனுமதி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கைக்கும் இந்தியாவுக்குமான சரக்கு கப்பல் சேவையை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், காங்கேசன்துறைக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையிலான சரக்குக் கப்பல் சேவையை நடத்துவதற்கான இலங்கையைச் சேர்ந்த ஹேலீஸ் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதி முதல் இந்த சேவையை நடத்த முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், பாண்டிச்சேரியிலிருந்து காங்கேசன்துறைக்கான சரக்குக் கப்பல் சேவையை எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நடத்துவதற்கான அனுமதி ஹேலீஸ் நிறுவனத்துக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.

Share:

Related Articles